செய்திகள்
பிரதமர் மோடி

இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது - அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

Published On 2020-05-16 13:40 GMT   |   Update On 2020-05-16 13:40 GMT
இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்று அதிபர் டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என டொனல்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலுர் அவர் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை நான் பெருமையுடன் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறி இருந்தார். “பிரதமர் மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்கு தெரியும். கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற எதிரியை வீழ்ந்த இந்தியாவுக்கு அமெரிக்க உறுதுணையாக நிற்கும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-



டொனல்டு டிரம்ப்புக்கு நன்றி, இந்த தொற்றுநோய்க்கு எதிராக நம் அனைவரும் கூட்டாக போராடி வருகிறோம். இதுபோன்ற காலங்களில், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், நமது உலகத்தை ஆரோக்கியமாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவும் முடிந்தவரை செயல்பட வேண்டியது எப்போதும் முக்கியம். இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
Tags:    

Similar News