search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ventilator"

    • உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.
    • எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் செயல்படும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அவர் மீது கூறப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந் தும் விடுவிக்கப்பட்டார்.

    இதனால் பல ஆண்டுகள் விசாரணை கைதியாக கோவை மத்திய ஜெயிலில் அகை்கப்பட்டிருந்த அவர், விடுதலை ஆனார். ஆனால் 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிபந்தனை ஜாமீனில் இருந்து வந்தார்.

    தனது உடல்நல பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் தனது ஜாமீனில் மேலும் தளர்வுகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை சுப்ரீம் கோர்ட்டு தளர்த்தியது.

    இதையடுத்து மதானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேரளாவுக்கு வந்தார். அவர் கல்லீரல் நோய் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் மதானி யின் உடல்நிலை கவலைக் கிடமான நிலையில் இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால் அவரை டாக்டர்கள் குழுவினர் வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்தனர். மேலும் டயாலிசிஸ் சிகிச்சை யும் நடந்து வருகிறது.

    மருத்துவமனையில் மதானியின் மனைவி சுபியா, மகன் சலாவுதீன் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

    ×