செய்திகள்
விவேக் குமார்

கொரோனா புள்ளிவிவரத்தில் சர்ச்சை - மேற்கு வங்காள சுகாதார செயலாளர் இடமாற்றம்

Published On 2020-05-13 12:04 GMT   |   Update On 2020-05-13 12:04 GMT
கொரோனா புள்ளிவிவர சர்ச்சை தொடர்பாக சுகாதார செயலாளர் விவேக் குமாரை சுற்றுச்சூழல் துறை செயலாளராக மாநில அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 118 பேர் பலியானதாகவும் அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் 72 மரணங்கள், கொரோனாவுடன் தொடர்புடையதாக கருதப்பட்டாலும், அவற்றுக்கு வேறு காரணங்களை கூறியுள்ளது.

இதுதொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், மாநில சுகாதார செயலாளர் விவேக் குமாரை சுற்றுச்சூழல் துறை செயலாளராக மாநில அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. புதிய சுகாதார செயலாளராக நாராயண ஸ்வரூப் நிகாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News