search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புள்ளிவிவரம்"

    தேசிய குற்ற ஆவண காப்பகம் சிறைத்துறை தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. #NCRB #Prisoners #Undertrials
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றங்களை உரிய முறையில் பதிவுசெய்து வரும் அமைப்பு தேசிய குற்ற ஆவண காப்பகம். இந்த அமைப்பு பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம் சிறைத்துறை தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என்ற புள்ளிவிவரம் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியா முழுவதிலும் மொத்தம் ஆயிரத்து 400 சிறைகள் உள்ளன. இதில் 2016, டிசம்பர் 31ம் தேதி வரை கிடைத்த தகவலின்படி 4.33 லட்சம் கைதிகள் இருக்கின்றனர்.



    இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 குற்றவாளிகளும், 2 லட்சத்து 93 ஆயிரத்த் 058 விசாரணை கைதிகளும், 3 ஆயிரத்து 089 பேர் தடுப்பு காவலிலும் உள்ளனர்.  இதன்மூலம், இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என தெரிய வந்துள்ளது.

    இதில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தான் அதிகளவில் விசாரணை கைதிகள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சிறைகளில் விசாரணை கைதிகளாக உள்ள பெண்கள் சிறையில் பிரசவித்த ஆயிரத்து 942 குழந்தைகளும் இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NCRB #Prisoners #Undertrials
    ×