செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

சத்ரபதி சாகு மகாராஜ் விவகாரம்: தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டார்

Published On 2020-05-08 03:05 GMT   |   Update On 2020-05-08 03:05 GMT
புகழ்பெற்ற ஆட்சியாளரான அவரை (சாகு மகாராஜ்) அவமதிக்க வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. எனினும் அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை :

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜின் நினைவு நாளையொட்டி டுவிட்டரில் பதிவு போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அந்த பதிவில் அவர், சத்ரபதி சாகு மகாராஜை வெறுமனே சமூக சேவகர் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அதை மாற்றிவிட்டார். இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜை சமூகசேவகர் என குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதாவால் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சம்பாஜி ராஜி இந்த விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் வலியுறுத்தினார்.

அவருக்கு தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பதிலில், “டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்ததும், அதை மாற்றும்படி எனது அலுவலகத்தில் கூறினேன். புகழ்பெற்ற ஆட்சியாளரான அவரை (சாகு மகாராஜ்) அவமதிக்க வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. எனினும் அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்றார்.
Tags:    

Similar News