செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக சமூகவலைதளத்தில் அவதூறு: போலீசில் புகார்

Published On 2020-05-06 03:30 GMT   |   Update On 2020-05-06 03:30 GMT
நாக்பூர் பா.ஜனதா தலைவா் பிரவீன் தட்கே, போலீஸ் கமிஷனர் பூஷண் குமார் உபாதயிடம் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சமூகவலைதளத்தில் மர்மநபர்கள் மிரட்டுவதாகவும், அவதூறு பரப்புவதாகவும் புகார் அளித்து உள்ளார்.
மும்பை :

நாக்பூர் பா.ஜனதா தலைவா் பிரவீன் தட்கே, நகர போலீஸ் கமிஷனர் பூஷண் குமார் உபாதயிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சமூகவலைதளத்தில் மர்மநபர்கள் மிரட்டுவதாகவும், அவதூறு பரப்புவதாகவும் புகார் அளித்து உள்ளார்.

இதே விவகாரம் குறித்து ரத்னகிரி போலீசில் பா.ஜனதா மேல்-சபை உறுப்பினர் பிரசாத் லாடும் புகார் ஒன்றை அளித்து உள்ளார். மேலும் இது குறித்து பா.ஜனதா மேல்- சபை உறுப்பினர் அனில் சோலே கூறுகையில், ‘‘பலர் தனிப்பட்ட முறையில் பா.ஜனதா தலைவர்களை தாக்கியும், அவதூறாகவும் பேசுகின்றனர். பட்னாவிஸ் தவிர முன்னாள் மந்திரிகள் சந்திரசேகர் பவன்குலே, சுதீர் முங்கண்டிவார், வினோத் தாவ்டே ஆகியோருக்கு எதிராகவும் சமூக வலைதளத்தில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன’’ என்றார். சமூகவலைதளத்தில் பா.ஜனதா வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவார் குற்றம்சாட்டினார்.

“கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது சமூகவலைதளங்களில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் இந்த புகார் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறினார்.
Tags:    

Similar News