செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

சமூக வலைதளங்களில் வைரலாகும் திருப்பூர் போலீசார் எடுத்த வீடியோ

Published On 2020-04-27 04:42 GMT   |   Update On 2020-04-27 04:42 GMT
கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக திருப்பூர் போலீசார் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் போது முகக்கவசம் அணிய வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வீடியோவினை வெளியிட்டது.

விழிப்புணர்வு வீடியோவில் ஊரடங்கு சமயத்தில் முகக்கவசம் அணியாமல் ஒரே வாகனத்தில் வலம் வந்த மூவரை மடக்கிப்பிடித்த போலீசார், போலி கொரோனா வைரஸ் நோயாளி இருக்கும் ஆம்புலன்சில் அவர்களை ஏற்றுவதும், அச்சத்தில் மூவரும் ஆம்புலன்சில் இருந்து வெளியேற முயலும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது. 

திருப்பூர் போலீசார் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ தவறான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அரசு உத்தரவை மீறிய நபர்களை போலி கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்படுகின்றனர் எனும் தலைப்பில் வீடியோ பதிவிடப்படுகிறது.



உண்மையில் இந்த சம்பவம் பற்றிய செய்திகள் பரவலாக வெளியிடப்பட்டன. எனினும், சமூக வலைதள பதிவுகளில் இந்த சம்பவம் உண்மையா அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. இதனால் இது உண்மையில் நிகழ்ந்ததாக பகிரப்பட்டு வருகிறது.

போலீசார் வெளியிட்ட வீடியோவின் இறுதியில் போலீஸ் அதிகாரி, இந்த வீடியோ திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டது என தெரிவிக்கிறார். வீடியோவில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட மூவரும் போலீஸ் அதிகாரியின் பின் நிற்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த வீடியோவினை திருப்பூர் போலீசார் திட்டமிட்டு படமாக்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடியோ எடுக்கப்படும் முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வீடியோவில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட மூவரும் உண்மையில் நடிக்க வைக்கப்பட்டனர். அந்த வகையில் வைரல் வீடியோவில் உள்ள சம்பவம் உண்மையில் அரங்கேறவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News