செய்திகள்
செங்கோட்டை முன் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள்

உலக பாரம்பரிய தினம் -செங்கோட்டையில் விளக்கால் அலங்கரித்த தொல்லியல் துறை

Published On 2020-04-18 15:39 GMT   |   Update On 2020-04-18 15:39 GMT
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை முன்பு தொல்லியல் துறை விளக்குகளால் அலங்கரித்துள்ளது.
புதுடெல்லி:

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை காப்பதற்காக ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.

இந்நிலையில், உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை முன்பு தொல்லியல் துறை விளக்குகளால் அலங்கரித்து வைத்துள்ளது பார்ப்போரை கவரும் விதமாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News