செய்திகள்
கங்கை நதி

ஊரடங்கு உத்தரவால் வாரணாசியில் தூய்மையாக காட்சி அளிக்கும் கங்கை

Published On 2020-04-05 10:10 GMT   |   Update On 2020-04-05 10:10 GMT
ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் வாரணாசியில் உள்ள கங்கை நதி தூய்மையாக காட்சியளிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 25-ந்தேதியில் இருந்து 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இன்றுடன் 12 நாட்கள் முடிவடைகிறது.

இதனால் காற்றில் உள்ள மாசு பெருமளவில் குறைந்துள்ளது. இதன்காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பார்த்தாலே இமயமலை தெள்ளத்தெளிவாக கண்களுக்கு காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் புனித நதியான கங்கை வாரணாசியில் மலையில் இருந்து விழும் தண்ணீர் எவ்வளவு தூய்மையாக இருக்குமோ, அந்த அளவிற்கு தூய்மையாக காட்சி அளிக்கின்றன. கங்கை நதி இந்த ஊரடங்கு உத்தரவுக்குப்பின் 40 முதல்  50 சதவிகிதம் தூய்மையடைந்துள்ளது என வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர் பிகே மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News