செய்திகள்
மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்

ஜார்க்கண்ட் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மத்திய மந்திரி

Published On 2020-04-05 08:26 GMT   |   Update On 2020-04-05 08:26 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஞ்சி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் இன்று நேரில் சென்றார். அங்கு அளிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 162 கொரோனா நோயாளிகள் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்தார். 
Tags:    

Similar News