செய்திகள்
கொரோனா வைரஸ் தாக்குதல்

கொரோனா வைரஸ் - பெண்களை விட ஆண்களே அதிகம் பேர் பலி

Published On 2020-04-04 10:39 GMT   |   Update On 2020-04-04 10:39 GMT
கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகளவு பலியாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரசுக்கு பலியானவர்களில் பாலினம் விகிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவு பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும் நிலையில் ஆண்களின் இறப்பு விகிதம் 9.2 ஆக உள்ளது.



இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பலியானவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்கள் அதிகளவு உயிரிழப்பதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் அறியப்படவில்லை. புகை பிடிப்பதால் நுழையீரல் பாதிக்கப்பட்டு அதன் மூலம் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாகி பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News