செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எய்ம்ஸ் டாக்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது

Published On 2020-04-04 09:37 GMT   |   Update On 2020-04-04 09:37 GMT
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவிக்கு நோய்த்தொற்று இன்றி குழந்தை பிறந்தது.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரின் 9 மாத கர்ப்பிணி  மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவிக்கு நோய்த்தொற்று இன்றி குழந்தை நலமுடன் பிறந்தது என எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News