செய்திகள்
மத்திய உள்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Published On 2020-04-03 14:33 GMT   |   Update On 2020-04-03 14:33 GMT
கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு  உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல் கட்டமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News