செய்திகள்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

ஏப்ரல் 7-க்குள் தெலுங்கானா கொரோனா தொற்றில் இருந்து விடுபடும்: முதல்வர் நம்பிக்கை

Published On 2020-03-30 16:53 GMT   |   Update On 2020-03-30 16:53 GMT
மக்கள் வழிமுறைகளை சரியாக கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் ஏப்ரல் 7-க்குள் தெலுங்கானா கொரோனா பிடியில் இருந்து விடுபடும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டியுள்ளது. இருந்தாலும் ஏப்ரல் 7-ந்தேதிக்குள் தெலுங்கானா கொரோனா தொற்று இல்லாத மாநிலமாகும் என அம்மாநில முதல்வர் எம். சந்திரசேகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம். சந்திரசேகர் ராவ் கூறுகையில் ‘‘மக்கள் அரசின் வழிமுறைகளை சரியாக கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்தால் ஏப்ரல் 7-ந்தேதிக்குள் தெலுங்கானா கொரோனா இல்லா மாநிலமாகும். விவசாயிகளிடம் இருந்து அனைத்து உற்பத்தி பொருட்களையும் அரசு வாங்கிக் கொள்ளும். இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். அவர்கள் நகரத்திற்குள்ளோ அல்லது மார்க்கெட்  இருக்கும் இடத்திற்கோ வரவேண்டியதில்லை. நாங்கள் டோக்கன் கொடுத்து, அதன் அடிப்படையில் வாங்கிக் கொள்வோம்.

நீங்கள் கும்பலாக சென்றால் போலீஸ் உங்களை அடிக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என அரசு போலீஸ்க்கு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களின் தவறு அல்ல. அரசின் உத்தரவை மட்டுமே அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

வெளிமாநிலத்தினர் எந்தவித கவலையும் பட வேண்டாம். ரேசன் கார்டு இல்லை என்றாலும் அவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படும்”என்றார்.
Tags:    

Similar News