செய்திகள்
ஜெயில் கைதிகள் (கோப்பு படம்)

கொரோனா பீதி: உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை

Published On 2020-03-28 22:57 GMT   |   Update On 2020-03-28 22:57 GMT
கொரோனா பீதி காரணமாக உத்தரபிரதேசத்தில் சிறையில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை 8 வாரங்கள் ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மளிகை கடைகள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஒருவேளை வீடுகளை விட்டு வெளியே வந்தாலும் அல்லது வீட்டிலேயும் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பொதுஇடங்களுக்கு மக்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் கைதிகள் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயாம் உள்ளது.



இதற்கிடையே, கொரோனா பீதி ஏற்பட்டுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படாத குற்றவாளிகளை நிபந்தனையில் விடுதலை செய்ய மாநில அரசுகள் ஆலோசனை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை அடுத்த 8 வாரங்களுக்கு ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்ட கைதிகளில் 8 ஆயிரத்து 500 பேர் மீதான குற்ற வழக்குகள் நடைபெற்று வருகிறது. எஞ்சிய 2 ஆயிரத்து 500 பேர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள் ஆவர். 

இதையடுத்து, கைதிகளில் வழக்கு நடைபெற்று வருபவர்களுக்கு நிபந்தனை ஜாமீனும், தண்டனை பெற்றவர்களுக்கு பரோலும் வழங்க மாநில அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை வழங்கியது. சிறைத்துறையின் பரிந்துரைக்கு அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.     
Tags:    

Similar News