செய்திகள்
கொரோனா வைரஸ்

உத்தரகாண்டில் மேலும் 2 வனத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா

Published On 2020-03-20 09:24 GMT   |   Update On 2020-03-20 12:09 GMT
ஸ்பெயின், ரஷ்யா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சர்வதேச சுற்றுலா சென்றுவிட்டு உத்தரகாண்ட் திரும்பிய மேலும் 2 பயிற்சி வனத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

டேராடூன்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அத்தியாவசியமாக தேவைப்படுபவர்கள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றலாம் என அறிவித்துள்ளது.

இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் நபராக 26 வயது பயிற்சி ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தநிலையில் ஸ்பெயின், ரஷ்யா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சர்வதேச சுற்றுலா சென்றுவிட்டு உத்தரகாண்ட் திரும்பிய மேலும் 2 பயிற்சி வனத்துறை அதிகாரிகளுக்கு கொரோனா இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.

இம்மாநிலத்தில் கொரொனா தடுப்புக்காக கூடுதலாக சிறப்பு வார்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வார்டுகளில் அதிக படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News