செய்திகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழா: அகமதாபாத் முதல் தண்டி வரை 27 நாள் பாதயாத்திரை

Published On 2020-03-07 09:15 GMT   |   Update On 2020-03-07 09:15 GMT
காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவையொட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை பாதயாத்திரை நடைபெறுகிறது.
புதுடெல்லி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.

இதில் ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள  அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள  தண்டி வரை 'காந்தி சந்தேஷ் யாத்திரா’ என்ற பெயரில் பாதயாத்திரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தண்டியில் நிறைவடையும் இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News