செய்திகள்
அமித்ஷா

இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள் - அமித்ஷா உறுதி

Published On 2020-02-28 17:13 GMT   |   Update On 2020-02-28 17:13 GMT
எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன, இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை இழக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:–

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன. முஸ்லிம்கள், குடியுரிமையை இழப்பார்கள் என்று கூறுகின்றன. இதன்மூலம் மக்களை தூண்டி விட்டு கலவரம் விளைவிக்க பார்க்கிறார்கள்.

குடியுரிமை சட்டத்தில், எந்த சட்டப்பிரிவு, குடியுரிமையை பறிப்பது பற்றி பேசுகிறது என்று அவர்களிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். இந்த சட்டத்தால் எந்த இந்திய முஸ்லிமும் குடியுரிமை இழக்க மாட்டார்கள். சிஏஏ சட்டம் குடியுரிமை வழங்குவதற்காக தான் இந்த சட்டமே தவிர, யாருடைய குடியுரிமையும் பறிக்காது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News