செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா

‘டிரம்புக்கு வெள்ளி சாவி வழங்க முடியவில்லையே’ - ஆக்ரா மேயர் வருத்தம்

Published On 2020-02-25 22:28 GMT   |   Update On 2020-02-25 22:28 GMT
ஆக்ரா மக்கள் சார்பில் நான் மேயர் என்ற முறையில் ஜனாதிபதி டிரம்புக்கு ‘ஆக்ராவின் சாவி’ என்று அழைக்கப்படும் வெள்ளி சாவியை வழங்க முடியவில்லை என மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆக்ரா:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் நேற்று முன்தினம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை பார்வையிட்டு வியந்தனர். டிரம்புக்கு ஆக்ரா மேயர் ‘ஆக்ராவின் சாவி’ என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளி சாவியை பரிசாக வழங்க திட்டமிட்டு இருந்தார். அந்த 12 அங்குல நீளமுள்ள சாவி வெள்ளியில் செய்யப்பட்டு, அதில் தாஜ்மகால் படமும், ஆக்ரா என்ற பெயரும் செம்பில் செதுக்கப்பட்டு இருக்கும். அதன் எடை 600 கிராம்.



இதுகுறித்து ஆக்ரா மேயர் நவீன் ஜெயின் கூறும்போது, “ஆக்ரா மக்கள் சார்பில் நான் மேயர் என்ற முறையில் இங்கு வந்த டிரம்புக்கு ‘ஆக்ராவின் சாவி’ வழங்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் பாதுகாப்பு தடைகள் காரணமாக டிரம்ப் வந்து இறங்கிய கேரியா விமான தளத்தில் என்னை அனுமதிக்கவில்லை. நாங்கள் அவருக்கு அந்த நினைவு பரிசை வழங்க நினைத்தோம், ஆனால் முடியவில்லையே” என்றார்.
Tags:    

Similar News