செய்திகள்
அமுல்யா

தேச துரோகிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் - கர்நாடக மந்திரி ஆவேசம்

Published On 2020-02-24 08:54 GMT   |   Update On 2020-02-24 08:54 GMT
தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக விவசாய துறை மந்திரி பி.சி.பாட்டீல் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகாவை சேர்ந்த 19 வயது மாணவி அமுல்யா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தேச துரோக வழக்கில் அவர் கைதாகி உள்ளார்.

இந்தநிலையில் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக மந்திரி ஆவேசமாக தெரிவித்துள்ளார். விவசாய துறை மந்திரி பி.சி.பாட்டீல் இதுதொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது உணவை சாப்பிட்டு விட்டு தேசத்துக்கு எதிரான கருத்துகளை கூறுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களை அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்ல வேண்டும்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். இதுகுறித்து பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார். மீடியாக்கள் மூலம் பிரதமருக்கு நான் இந்த கோரிக்கையை வைக் கிறேன். இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதமும் எழுத இருக்கிறேன்.

தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவதில் சட்ட சிக்கல் உள்ளது. ஜூலை மாதம் நடைபெறும் மந்திரி சபை விரிவாக்கத்தின் போது தோல்வி அடைந்த வர்களுக்கும் மந்திரி பதவி வழங்குவதாக முதல்- மந்திரி எடியூரப்பா உறுதி அளித்துள்ளார்.

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி சிவக் குமார், அமுல்யா விவகாரம் குறித்து கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறும் போது, ‘‘இதுபோன்றவர் களை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. இவர்களால் இந்தியாவுக்கு அவமானச் சின்னமே’’ என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News