செய்திகள்
பாஸ்டேக்

‘பாஸ்டேக்’ பயன்பாடு - 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி அபராதம் வசூல்

Published On 2020-02-24 01:27 GMT   |   Update On 2020-02-24 01:27 GMT
‘பாஸ்டேக்’ வழியில் தவறுதலாக வரும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், ‘பாஸ்டேக்’ முறையில் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயன்படுத்துவோருக்கு என தனி வழியும், சாதாரண முறையில் சுங்க கட்டணம் செலுத்துவோருக்கு தனி வழியும் உள்ளது.

இதில் ‘பாஸ்டேக்’ வழியில் தவறுதலாக வரும் வாகனங்களுக்கு அபராதமாக இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News