செய்திகள்
தேர்தல் பிரசாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

அனைத்து இலவச திட்டங்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் - கெஜ்ரிவால்

Published On 2020-02-19 16:25 GMT   |   Update On 2020-02-19 16:25 GMT
டெல்லியில் நடைமுறையில் உள்ள அனைத்து இலவச திட்டங்களும் மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

70 தொகுதிகளை டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. 

அதை எதிர்த்துபோட்டியிட்ட பாஜக 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. காங்கிரஸ் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதல்- மந்திரியாக மூன்றாவது அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதல்மந்திரியாக பதவியேற்றப்பின் டெல்லி தலைமைச்செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து இலவசத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தோம். 

அந்த இலவச திட்டங்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.



2015 முதல் 2019 வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச திட்டங்களில் சில பின்வருமாறு:-

* 200 யூனிட்டுகள் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 20 லிட்டர் குடிநீர் வழங்குதல்.

* பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்தல்.

* டெல்லி அரசு பள்ளிகளில் தரமான கல்வியை உறுதி செய்து, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

* பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைஃபை சேவை

மேலும், நடைமுறையில் உள்ள அனைத்து இலவச திட்டங்களை தொடர்ந்து தற்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News