செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டில் அறிவிக்காத நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

Published On 2020-02-15 01:55 GMT   |   Update On 2020-02-15 01:55 GMT
பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டுக்கு அப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தால், அதற்கும் தயாராகவே இருக்கிறோம். இங்கு கூறப்பட்ட யோசனைகளை பரிசீலிப்பேன் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி :

டெல்லியில், பட்ஜெட் தொடர்பாக பல்வேறு துறை பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். பொருளாதார செயல்பாடுகளை புதுப்பிப்பதற்கான யோசனைகளை பிரமுகர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடையே நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘இந்த பட்ஜெட் பங்கு மதிப்பு, பத்திரங்கள், பண சந்தைகள் ஆகியவற்றின் மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்காக பட்ஜெட்டுக்கு அப்பாலும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்தால், அதற்கும் தயாராகவே இருக்கிறோம். இங்கு கூறப்பட்ட யோசனைகளை பரிசீலிப்பேன்’’ என்று கூறினார்.
Tags:    

Similar News