செய்திகள்
தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங்

டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2020-02-09 15:59 GMT   |   Update On 2020-02-09 15:59 GMT
டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நேற்று தேர்தல் அமைதியாக நடந்தது. 61.46 சதவீத வாக்குகள் பதிவாயின. 

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.

இந்த நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி  சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலைவிட 2% அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

மேலும் டெல்லி பள்ளிமாரான் சட்டமன்ற தொகுதியில் அதிகப்பட்சமாக 71.6 % வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும்,குறைந்தபட்சமாக டெல்லி கன்டோன்மென்ட் தொகுதியில் 45.4% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

2015  டெல்லி சட்டசபை தேர்தலில் 67.47% வாக்குகள் பதிவாகி இருந்த‌து குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News