செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இலங்கை பிரதமர் ராஜபக்சே சந்திப்பு

Published On 2020-02-08 13:12 GMT   |   Update On 2020-02-08 13:12 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே, இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி வரவேற்றார். ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதன்பின், இலங்கை பிரதமர்  ராஜபக்சே மற்றும் அவரது குழுவினர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினர். ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. 

இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்துப் பேசினார்.
Tags:    

Similar News