செய்திகள்
திருவள்ளுவர்

திருவள்ளுவரை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன் - திருக்குறள் வழி செயல்படும் மோடிக்கு பாராட்டு

Published On 2020-02-01 08:12 GMT   |   Update On 2020-02-01 08:12 GMT
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை சுட்டிக்காட்டி பேசினார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி மத்திய அரசு செய்த பணிகள் குறித்து விளக்கினார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

''பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து'' என்பது திருக்குறள். நோயின்மை, செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, பாதுகாப்பு குறித்து இந்த குறள் விளக்குகிறது.

இதில் பிணியின்மை என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும், விளைவின்பம் என்பது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்பதையும், ஏமம் என்பது நாட்டின் பாதுகாப்பையும் குறிக்கிறது என விளக்கிப் பேசினார்.
Tags:    

Similar News