செய்திகள்
பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

ஜிடிபி அதிகபட்சம் 6.5 சதவீதமாக இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

Published On 2020-01-31 10:09 GMT   |   Update On 2020-01-31 12:09 GMT
அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

அதில், ஏப்ரல் 1-ம் தேதி தொடங்க உள்ள அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது (ஜிடிபி) 6 சதவீதம் முதல் அதிகபட்சம் 6.5 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் மூலம், பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இது, 2020-21ல் பொருளாதாரம் வலுவான நிலையை எட்டுவதற்கு உதவும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

சந்தைகள் மற்றும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையிலான 10 புதிய யோசனைகளையும் பொருளாதார ஆய்வறிக்கை கூறி உள்ளது. 

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையிலான குழு இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News