செய்திகள்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

மக்களை கண்ணியமாக நடத்துங்கள்- அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி அறிவுரை

Published On 2020-01-17 21:27 GMT   |   Update On 2020-01-17 21:27 GMT
மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார்.
புவனேஷ்வர்:

ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக், “மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான். இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர்கள்தான் ஊதியம் தருகிறார்கள். அவர்களே உண்மையான எஜமான். அவர்கள் உங்களை நாடி வரும்போது கண்ணியமாக நடத்துங்கள். அவர்களின் பிரச்சினைகளை நேர்மையாக அணுகுங்கள்” என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

“நம் அனைவருக்கும் குடும்பம்தான் முக்கியமானது. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்த குடும்பம் 4.5 கோடி மக்களை கொண்டது. நம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கொடுப்போம். நம் சகோதர, சகோதரிகளுக்கு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நம் பெற்றோர்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவோம்” என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் உருக்கமாக பேசினார்.
Tags:    

Similar News