செய்திகள்
இந்திய ரூபாய் நோட்டு

இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் அதன் மதிப்பு உயரும் - சுப்பிரமணியன் சாமி

Published On 2020-01-15 18:50 GMT   |   Update On 2020-01-15 18:50 GMT
இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என ராஜ்யசபா எம்.பி.யும், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
கந்த்வா:

ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, விவேகானந்தர் குறித்து உரையாற்றினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்றும் தெரிவித்தார்.  இதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தோனேஷியா நாட்டின் பண மதிப்பு நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அவர் விநாயகர் தடைகளை நீக்குபவர் என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.



குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் சி.ஏ.ஏ. தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், 2003ல் மன்மோகன் சிங்கும் பார்லிமெண்டில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News