செய்திகள்
கெஜ்ரிவால், சிசோடியா

டெல்லி தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி - புதுடெல்லியில் கெஜ்ரிவால் போட்டி

Published On 2020-01-14 14:50 GMT   |   Update On 2020-01-14 16:21 GMT
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது. புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக ஆகியவை முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி தொகுதியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். திமார்புர் தொகுதியில் பாண்டேவும், கல்காஜி தொகுதியில் அதிஷியும், ராஜேந்திரா நகர் தொகுதியில் சதாவும் போட்டியிட உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 

தற்போது பதவியில் உள்ள 15 எம்.எல்ஏக்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News