செய்திகள்
ஜி.எஸ்.டி. வரி

டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்

Published On 2020-01-01 10:55 GMT   |   Update On 2020-01-01 10:55 GMT
டிசம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி. வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் பொருளாதார மந்தநிலையால் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. நவம்பர் மாதத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ஒரு லட்சத்து 3 கோடி ரூபாயாக உயர்ந்தது.
 
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 1.03 லட்சம் கோடி ரூபாய் மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.19,962 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.26,792 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.48,099 கோடி, கூடுதல் ’செஸ்’ வரி ரூ. 8,331 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News