செய்திகள்
மன்மோகன்சிங், பிரதமர் மோடி

மன்மோகன்சிங் பற்றிய மோடி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு

Published On 2019-12-22 22:16 GMT   |   Update On 2019-12-22 22:16 GMT
குடியுரிமை குறித்து மன்மோகன்சிங் பற்றிய மோடி கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது
புதுடெல்லி:

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் பேசுகையில், மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான வங்காளதேச அகதிகளுக்கு நாம் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார்’’ என குறிப்பிட்டார்.

இதை காங்கிரஸ் கட்சி மறுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்ன சொல்கிறார் என்பதை தயவு செய்து கவனமாக கேளுங்கள். அண்டை நாட்டில் துன்புறுத்தப்படுகிறவர்களுக்கு குடியுரிமை அளிக்கும்போது மதம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று அவர் ஒருமுறைகூட கூறவில்லை. அகதிகளிடம் தாரளமாக நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறார்’’ என கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், ‘‘உங்கள் கட்சியும், உங்கள் தலைவர்களும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் நோக்கம் என்ன என்பதை பலமுறை வெளிப்படையாக கூறி உள்ளனர். அதில் இருந்து பின்வாங்குவதில் அர்த்தம் இல்லை. ஒவ்வொரு இந்தியரும், மதம், சாதி எதுவாக இருந்தாலும் குடியுரிமை சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால் அவை அரசியலமைப்பின் மதிப்புகளை மீறுகின்றன’’ என கூறி உள்ளது.
Tags:    

Similar News