செய்திகள்
அப்துல்லா அசாம் கான்

உ.பி. முன்னாள் மந்திரி அசாம் கான் மகனின் தேர்தல் வெற்றி செல்லாது - அலகாபாத் ஐகோர்ட் அதிரடி

Published On 2019-12-16 09:52 GMT   |   Update On 2019-12-16 12:42 GMT
பிரமாணப் பத்திரத்தில் வயதை உயர்த்திக்காட்டி தேர்தலில் போட்டியிட்ட உ.பி. முன்னாள் மந்திரியின் மகனை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது மந்திரியாக பதவி வகித்தவர், அசாம் கான். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்பொது தெரிவித்து வம்பில் சிக்கிய அசாம் கான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாக உள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவரது மகனான அப்துல்லா அசாம் கான் ராம்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சுவார் தொகுதியில் போட்டியிட்டார்.



அப்போது அவர் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் போலி பிறப்பு சான்றிதழை இணைத்து தனக்கு 25 வயது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்ற பின்னர் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி அப்துல்லாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் காசிம் அலி கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தலில் போட்டியிட்டபோது அப்துல்லா அசாம் கான் 25 வயதுக்கு குறைவானவராக இருந்தார் என்ற அடிப்படையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி கேசர்வானி அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News