செய்திகள்
மாநிலங்களவையில் உரையாற்றும் வைகோ

தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் -பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

Published On 2019-12-04 09:31 GMT   |   Update On 2019-12-04 09:31 GMT
தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

மாநிலங்களவையில் இன்று ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ பேசியதாவது:-

ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றங்களைப் போல மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற அமைப்பு இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை ஏற்கனவே நிறைவேற்றி இருக்கிறது. 

உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலத்தை தவிர இந்தியும் இருப்பதைப் போல்,  தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளையும் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.
Tags:    

Similar News