செய்திகள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி

குழந்தை திருமணங்களை பற்றி தகவல் தெரிவிப்பது கட்டாயம் - மத்திய அரசு பரிசீலனை

Published On 2019-11-26 22:48 GMT   |   Update On 2019-11-26 22:48 GMT
குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிப்பதை கட்டாயம் ஆக்க குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி:

சட்டபூர்வ திருமண வயது, பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் உள்ளது. ஆனால், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதும், அவர்கள் 18 வயதுக்குள்ளேயே குழந்தை பெறுவதும் அதிகரித்து வருகிறது.

இதை கருத்திற்கொண்டு, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியதாவது:- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தெரிவிப்பது கட்டாயம் என்று ‘போக்சோ’ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதுபோல், குழந்தை திருமணங்கள் குறித்தும் தகவல் தெரிவிப்பதை கட்டாயம் ஆக்க குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News