செய்திகள்
பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஜார்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்டில் 6 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்

Published On 2019-10-23 09:23 GMT   |   Update On 2019-10-23 09:23 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 27-ந் தேதி முடிகிறது. அங்கு டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6  பேர் இன்று பா.ஜனதாவில் இணைந்தனர்.



ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவை (ஜே.எம்.எம்.) சேர்ந்த குணால் சாரங்கி, ஜே.பி.பாய் பட்டேல், சம்ரா லிண்டா, காங்கிரசை சேர்ந்த சுக்தேவ் பகத், மனோஜ் யாதவ் மற்றும் நவ்ஜவான் மோர்ச்சா கட்சியை சேர்ந்த பானு பிராப் சகி ஆகியோர் அம்மாநில முதல்-மந்திரி ரகுபர்தாஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

Tags:    

Similar News