செய்திகள்
நிதின் கட்காரி

பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றி பெறும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி கணிப்பு

Published On 2019-10-21 08:36 GMT   |   Update On 2019-10-21 08:36 GMT
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி சாதனை வெற்றியை பதிவு செய்யும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும், என்றார்.



“இந்த தேர்தலில் பாஜக-சிவ சேனா கூட்டணி சாதனை வெற்றியை பதிவு செய்யும். பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். மக்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும் நோட்டாவுக்கு ஓட்டு போடுவது ஜனநாயகத்தில் ஒரு நல்ல வழி இல்லை” என்று கட்காரி தெரிவித்தார்.

ஆனால், மகாராஷ்டிராவில் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைமக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News