செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு

Published On 2019-10-05 07:02 GMT   |   Update On 2019-10-05 07:02 GMT
காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
காஷ்மீர்:

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் தாங்கள் கொண்டுவந்த கையெறி குண்டுகளை துணை ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து வீசினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
Tags:    

Similar News