செய்திகள்
உள்துறை மந்திரி அமித்‌ஷா

‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழியுங்கள்’ - அமித்‌ஷா வேண்டுகோள்

Published On 2019-10-02 22:49 GMT   |   Update On 2019-10-02 22:49 GMT
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாட்டுக்கும், உலகுக்கும் பெரிய ஆபத்து என உள்துறை மந்திரி அமித்‌ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தையொட்டி நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்‌ஷா 500 மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.

முன்னதாக அவர் கூறும்போது, ‘‘காந்தி இந்தியாவின் சுதந்திரத்துக்காக பாடுபட்டதுடன், சத்தியாகிரகத்தின் சக்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

தூய்மைக்கான தூதுவராகவும் காந்தி திகழ்ந்தார். சுதந்திரத்துக்கு பின்னர் அதனை ஒரு பெரிய இயக்கமாக நடத்தியது பிரதமர் மோடி மட்டுமே. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாட்டுக்கும், உலகுக்கும் பெரிய ஆபத்து. அதனை மக்கள் ஒழிக்க வேண்டும்.

இதனை ஒரு பெரிய இயக்கமாக மாற்ற வேண்டியது பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களின் பொறுப்பு’’ என்றார்.
Tags:    

Similar News