செய்திகள்
வெங்காயம்

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு

Published On 2019-09-29 08:39 GMT   |   Update On 2019-09-29 08:39 GMT
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது.
புதுடெல்லி:

வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 29 ரூபாய்க்கு விற்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News