செய்திகள்
மாயாவதி

மாயாவதியின் முன்னாள் செயலாளரின் ரூ.230 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல்

Published On 2019-09-24 15:51 GMT   |   Update On 2019-09-24 15:51 GMT
உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதியின் முன்னாள் செயலாளரின் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.
புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மாயாவதி. இவரது செயலாளராக பதவி வகித்தவர் நெட் ராம்.

கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி முதல் மந்திரியாக இருந்தபொழுது அவருக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம்.  கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராமின் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. டெல்லி, நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள சுமார் 19 அசையா சொத்துக்களும் இதில் அடங்கும்.
Tags:    

Similar News