செய்திகள்
மாதிரிப் படம்

மொபைல் ஆப் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு - அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை

Published On 2019-09-23 08:31 GMT   |   Update On 2019-09-23 08:31 GMT
மக்கள்தொகை கணக்கெடுப்பு இனி மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படும். ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை அனைத்தும் ஒரே அடையாள அட்டையாக மாற்றப்படும்.
புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பூட்டும் செயல் அல்ல; இதன் மூலமாகத்தான் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உரியவர்களை சென்றடைய முடியும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துவைக்க அரசுக்கு உதவிகரமாக உள்ளது.



வரும் 2021-ம் ஆண்டில் நடத்தப்படும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு  மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படும். இதன் வாயிலாக ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு வாக்காளர் அட்டை ஆகிய அனைத்துக்கும் ஒரே அடையாள அட்டை என்ற நடைமுறையை ஏற்படுத்த முடியும் என அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும், ஒருவர் இறந்து விட்டால் அதுதொடர்பான விபரத்தை உடனடியாக மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்யும் நடைமுறையும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டில் நடந்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News