செய்திகள்
ராஜ்நாத் சிங்

ரசாயன-உயிர்க்கொல்லி ஆயுதங்களைச் சமாளிக்க சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்

Published On 2019-09-20 18:58 GMT   |   Update On 2019-09-20 18:58 GMT
ரசாயன-உயிர்க்கொல்லி ஆயுதங்களைச் சமாளிக்க சரியான பயிற்சி அவசியம் என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குவாலியர்:

ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பாதுகாப்புப் படை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க ரசாயன-உயிர்க்கொல்லி ஆயுதங்களை எதிர் தரப்பு பயன்படுத்தக்கூடும். அதனால் மத்திய பாதுகாப்பு படைகள் இவைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ரசாயன - உயிர்க்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும்.

பாதுகாப்பு பணிகள் மூலம் ராணுவத்தினர் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல பாதுகாப்பு நிறுவனங்களில் புதுமைகள் மற்றும் நவீன ஆயுதங்களை உருவாக்கவும் விஞ்ஞானிகள் பாடுபடுகின்றனர். இந்த இருவருமே நாட்டிற்கு சம அளவில் பங்களிப்பு செய்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News