செய்திகள்
பிரதமர் மோடி

133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலை - 11 மாத சர்தார் படேல் சிலை: மோடி ஒப்பீடு

Published On 2019-09-17 14:20 GMT   |   Update On 2019-09-17 14:20 GMT
நியூயார்க்கில் அமைக்கப்பட்டு 133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலையையும், குஜராத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு 11 மாதமான சர்தார் படேல் சிலையையும் ஒப்பீடு செய்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடியின் 69-வது பிறந்தநாளை பாஜகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் சொந்த மாநிலமான குஜராத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள நர்மதா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். 
 
இதையடுத்து பிரதமர் மோடி அந்தப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 'Statue of Unity' சர்தார் வல்லபாய் பட்டேல் உருவச் சிலையை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டுள்ள 133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலையை பார்வையிட தற்போது தினமும் 10 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். ஆனால், இங்கு அமைக்கப்பட்டு 11 மாதமே ஆகியுள்ள ஒற்றுமையை வலியுறுத்தும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண தினமும் 8 ஆயிரத்து 500 பேர் வருகை தருகின்றனர் என பெருமிதமாக குறிப்பிட்டார்.
Tags:    

Similar News