செய்திகள்
சிபிஐ

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கைது- சி.பி.ஐ. நடவடிக்கை

Published On 2019-09-12 08:53 GMT   |   Update On 2019-09-12 08:53 GMT
ரூ.16 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரியை இன்று சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்தது.
புதுடெல்லி:

மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் தீரக் சிங். ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான பணிகளை கவனித்து வருபவர்களில் ஒருவர்.

தீரக்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ.க்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

தீரக்சிங் தனது வீட்டில் ரூ.16 லட்சம் லஞ்சம் வாங்க முயன்றபோது சி.பி.ஐ. இன்று அதிரடியாக கைது செய்தது.

சி.பி.ஐ. அதிகாரிகள் தீரக்சிங்கை கைது செய்த போது அவரிடம் ரூ.16 லட்சம் கையில் இருந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News