செய்திகள்
பயனாளிக்கு கேஸ் இணைப்பு வழங்கிய பிரதமர் மோடி

பிரதமரின் இலவச கேஸ் திட்டம் - 8 கோடி இணைப்புகளை தொட்டது

Published On 2019-09-07 13:09 GMT   |   Update On 2019-09-07 13:09 GMT
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை இன்று 8 கோடியை தொட்டுள்ளது.
அவுரங்காபாத்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா பகுதியில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு ரூ.8,000 கோடி மதிப்பீட்டிலான இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா 1.5.2016 அன்று நடைபெற்றது.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 8 கோடி ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் சார்பில் வழங்கப்பட்ட கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 8 கோடியை தொட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி எட்டு கோடியாவது கேஸ் இணைப்பை பயனாளிக்கு வழங்கினார். இதில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்றார்.
Tags:    

Similar News