செய்திகள்
சொமாட்டோ பணியாளர்களின் போராட்டம்

பன்றி, மாட்டிறைச்சி டெலிவரி செய்ய வற்புறுத்துவதா? - சொமாட்டோ பணியாளர்கள் போராட்டம்

Published On 2019-08-11 09:56 GMT   |   Update On 2019-08-11 09:56 GMT
மேற்கு வங்காளத்தில் செயல்படும் ‘சொமாட்டோ' நிறுவனம் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உணவுகளை டெலிவரி செய்ய வற்புறுத்துவதை எதிர்த்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொல்கத்தா:

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் தேவைக்கேற்ப பிரபல ஓட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளை அவர்களின் இருப்பிடம் தேடிச்சென்று டெலிவரி செய்யும் தொழிலில் உபேர் ஈட்ஸ், ஸ்விகி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் செயல்படும் ‘சொமாட்டோ' நிறுவனம் பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு  டெலிவரி செய்ய வற்புறுத்துவதை எதிர்த்து அந்நிறுவனத்தின் பணியாளர்கள் ஹவுரா நகரில் ஒருவாரமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இவ்விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் மாநில மந்திரி ரஜிப் பானர்ஜி, பணியாளர்களின் மத உணர்வுகளுக்கு மாறாக இவ்வாறு செய்யுமாறு அந்நிறுவனம் வற்புறுத்துவது மிகவும் தவறானது. இச்சம்பவம் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News