செய்திகள்
இரங்கல் கூட்டத்தில் சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவராக இருந்தபோது என்னை வழிநடத்தியவர் ஷீலா தீட்சித் - சோனியா காந்தி உருக்கம்

Published On 2019-08-10 14:38 GMT   |   Update On 2019-08-10 14:38 GMT
என்னுடைய இருள்மயமான ஆண்டுகளில் துணையாக இருந்த ஷீலா தீட்சித் காங்கிரஸ் கட்சியின் தலைவராக என்னை பொறுப்பேற்க வைத்து மூத்த சகோதரியாக வழிநடத்தினார் என சோனியா காந்தி குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

டெல்லி முன்னாள் முதல் மந்திரி மறைந்த ஷீலா தீட்சித்துக்கு நினைவாஞ்சலி செலுத்தும் பிரார்த்தனை கூட்டம் டெல்லி மார்டர்ன் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இன்றிரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, நடிகை ஷர்மிளா டாகூர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்று மறைந்த ஷீலா தீட்சித்துடன் தங்களுக்கு இருந்த நல்லுறவுகளை நினைவுகூர்ந்தனர்.



இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ‘(ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர்) இருள்மயமான ஆண்டுகளில் என்னுடைய உற்றத்துணையாக ஷீலா தீட்சித்  இருந்தார்.

என்னை வற்புறுத்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வைத்ததுடன் ஒரு மூத்த சகோதரியாக இருந்து என்னை அவர் வழிநடத்தினார். அவரது இழப்பு தனிப்பட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்’ என உருக்கமாக குறிப்பிட்டார்.
Tags:    

Similar News