செய்திகள்
அரியான மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்

இனி காஷ்மீர் பெண்களை திருமணம் செய்யலாம் - அரியானா முதல்வர் மனோகர் லால்

Published On 2019-08-10 12:22 GMT   |   Update On 2019-08-10 12:22 GMT
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் , இனி காஷ்மீர் பெண்களை மணமுடிக்கலாம் என அரியானா மக்கள் கூறிவருவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகார்:

நேற்று படேகாபாத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கலந்து கொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆண் பெண் விகிதம் சமமாக இல்லாவிடில் சில பிரச்சனைகள் எழக்கூடும். இணை மந்திரி ஒம் பிரகாஷ் தங்கர் ஹரியானவிற்கு பீகாரில் இருந்துதான் மணமகள்கள் வருவார்கள் என ஒருமுறை கூறி இருந்தார். 

ஆனால், இனி காஷ்மீரில் உள்ள பெண்களையே மணமுடிக்கலாம் என தற்போது ஒரு சிலர் கூறி வருகின்றனர். நகைச்சுவையாக இருந்தாலும் , ஆண் பெண் பாலின விகிதம் சரியாக இருந்தால் சமூகத்தில் சமநிலை நிலவும் , பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை, என்றார்.

ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி பேசிய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவரது கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மகளிர் சங்க அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News