செய்திகள்
ஸ்ரீ சைலம் அணையில் இருந்து நீர் திறப்பு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு

Published On 2019-08-10 10:22 GMT   |   Update On 2019-08-10 10:22 GMT
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு.
ஐதராபாத்:

ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துவிட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கிருஷ்ணா நதிநீரை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து, தமிழக முதல்வர்  அளித்த கடிதத்தை கொடுத்தனர்.

இதையடுத்து, தமிழகத்துக்கு தரவேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திர முதல்-மந்திரி ஒப்புக்கொண்டார். தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறந்தது ஆந்திர அரசு. முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் உத்தரவின்படி, விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சென்னை குடிநீர் மக்களின் தாகம் விரைவில் தீர்க்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News